சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றிபெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சிசிடிவி மற்றும் வாக்குச்சீட்டுகளை ஆய்வு செய்த நீதிபதிகள் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் தேர்தல் அதிகாரி அனில் மசிக் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆனது.

இதனை அடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி அனில் மசிக் மீது கிரிமினல் வழக்கு தொடர உத்தரவிட்ட நீதிபதிகள் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவித்ததை செல்லாது என்று தீர்பளித்துள்ளனர்.

தவிர தேர்தல் அதிகாரியால் செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளும் ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக விழுந்த வாக்குகள் என்பதால் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.