டெல்லி: தேர்தல் காலத்தில், மாநில அரசின் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான மேற்குவங்க மாநில மனுவை தள்ளுபடி செய்தது.

நாடு முழுவதும் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே புதுச்சேரி உள்பட 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 23ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்ததை எதிர்த்து அர்க்கா குமார் நாக் என்பவர் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆதரவான மூத்த வழக்கறிஞர் கல்யான் பானர்ஜி தனது வாதத்தில், ”தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளது. தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 1100 அதிகாரிகளை ஒரே இரவில் இடமாற்றம் செய்தது. ஒட்டுமொத்தமாக மாற்றினால் மாநில நிர்வாகப் பணிகள் முடங்கும்’’ என்று தெரிவித்தார்.
இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி,‘‘அதிகாரிகள் இடமாற்றம் என்பது தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறை ஆகும். இது ஒன்றும் புதியது கிடையாது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் முழு அதிகாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த விவகாரத்தில் முன்னதாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
தொடர்ந்து இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் இடமாற்ற விவகாரத்தில் ஒரு முக்கியக் குறிப்பை நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர். ‘‘அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் பொழுது மாநிலஅரசுடன் தேர்தல் ஆணையம் கலந்தாலோசிக்க வில்லை” என்ற குற்றச்சாட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. இது சர்ச்சைக்குரிய சட்டரீதியான கேள்வி. என்றதுடன், ஏனெனில் அகில இந்திய பணிகள் அமைக்கப்பட்டதில் நோக்கமே சிதைக்கப்பட்டு வருவது நமது நாட்டின் துரதிருஷ்டம் என்றும், . மாநில அரசு, தேர்தல் ஆணையம் என இருதரப்புக்கும் நம்பிக்கையின்மை நிலவியதால் எஸ்ஐஆர் பணியில் நீதிபதிகளை நியமிக்க வேண்டிய நிலை உச்ச நீதிமன்றத்திற்கு ஏற்பட்டது எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, அது குறித்து மட்டும் பின்னர் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]