சென்னை:
பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நீதிமன்றக் கட்டட திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியும் கருத்தில் கொள்ளப்படவேண்டும். தமிழ் மொழி உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர் தென்மாநில மக்கள் கோரிக்கையை ஏற்று, உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்பட வேண்டும் என, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.