சென்னை:
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி, இன்று சிறப்பு கிராமசபைக் கூட்டங்களை நடத்துமாறு மத்திய ஊரக வளர்ச்சித் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கவும், உறுதிமொழி எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி, சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டதற்கான விவரங்களை மத்திய அரசின் இணையதளத்தில் உள்ளீடு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இன்று நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

தேசிய ஊராட்சி தினத்தையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் செங்காடு கிராமத்தில் இன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா்.