டெல்லி: சுவரொட்டிகளில் சரத் பவாரின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தக்கூடாது என்று அஜித் பவார் குழுவை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் (என்சிபி) நிலவி வந்த சர்ச்சையை,  அக்கட்சி இரண்டாக பிளவு பட்டது. கட்சியை முழுமையாக அஜித்பவார் அபகரித்து கொண்ட நிலையில், இந்திய தேர்தல் ஆணையமும் அவரது ஆவணங்களை சரிபார்த்து, அஜித்பவார்தான் தேசிய வாத கட்சி தலைவர் என அறிவித்தது. இதனால், தேசியவாத கட்சியை தொடங்கிய சரத்பவார் வேறு வழியின்ற புதிய கட்சியை தொடங்கினார். அதன்படி,  என்சிபி-சரத்சந்திர பவார் என்ற பெயரை தேர்தலுக்கு ஏற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் அவரது அணிக்கு தேசியவாத காங்கிரஸ் – சரத்சந்திர பவார்’’ என்ற பெயர் கிடைத்துள்ளது. இந்த நிலையில், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தங்களது கட்சி விளம்பரங்களில், சரத்பவாரின் புகைப்படங்களை வெளியிட்டு அனுதாபம் தேடி வந்தது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சரத்பவார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தனது படம் உள்பட எந்தவொரு அடையாளத்தையும் அஜித்பவார்  மற்றும் அவரது கட்சி உபயோகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்த மனவை விசாரித்த உச்சநீதிமன்றம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்  சுவரொட்டிகளில் சரத் பவாரின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்த வேண்டாம் என்று அஜித் பவார் குழுவை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. அதுபோல அவரது  ‘கடிகாரம்’ சின்னத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும், “உங்கள் அடையாளத்தை மட்டும் பிரபலப்படுத்துங்கள்’ என்று அறிவுறுத்தி உள்ளது.