சென்னை; முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் பல நூறு பேர்கள் கலந்துகொண்ட நிலையில், அதில் 34 பேர் மட்டுமே தங்களது கருத்துக்களை பதிந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி பேனா நினைவு சின்னத்துக்கு 22 பேர் ஆதரவும் 12 பேர் எதிர்ப்பபும் என மொத்தம் 34 பேர் மட்டுமே கருத்துக்களை பதிவிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை அதாவது பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தெரிவித்துள்ளது.
மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில், 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மேலும் கருணாநிதி நினைவிட வளாகத்தில் ரூ.80 லட்சத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை குழு ஒப்புதலுக்கு அனுப்பிய நிலையில் அதற்கு அனுமதி அளித்து ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து கருணாநிதி நினைவிடம் அருகே உள்ள மெரினா கடலில் 137 அடி உயர பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கு இதற்கான முதல் கட்ட அனுமதி கிடைத்த நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கடந்த ஜனவரி 31 ஆம் தேதி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், பூவுலகின் அமைப்பினர் உள்பட பல சமூக ஆர்வலர்கள், பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஆனால், இதுதொடர்பான கருத்துக்களை கேட்க விடாமல், அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தினார். இதனால், சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், இதை நடத்திய அதிகாரிகளும், காவல்துறையினரும், அரசுக்கு ஆதரவாக செயல்பட்டது தொடர்பான வீடியோவும் வெளியானது. இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக செய்தியளார்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், கடலில் பேனா சின்னம் அமைத்தால் உடைப்பேன் என கூறியிருந்தார். இதே போல பாஜக உள்ளிட்ட ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்த போதும் பேனா நினைவு சின்னம் அமைக்க ஆதரவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் ஒருசிலர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளதாக பொதுப்பணித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள தகவலில், பேனா நினைவு சின்ன கருத்துக்கேட்பு கூட்டத்தில், மொத்தமாக 34 பேர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து இருந்தனர். என்றும், அதில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க 22 பேர் ஆதரவும், 12 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த கருத்துகளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் திருத்தம் செய்து மத்திய அரசிடம் பொதுப்பணித்துறை விரைவில் சமர்பிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில், 34 பேர் மட்டுமே கருத்துக்களை பதிந்தார்கள் என்றால், கலந்துகொண்ட மற்றவர்கள் யார், அவர்கள் எதற்காக கூட்டத்தில் கலந்துகொண்டார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. கருத்துக்கேட்பு கூட்டத்தில் பேனா சின்னத்துக்கு எதிர்ப்பு சிலர் பேசும்போது அவர்களை தாக்க முனைந்த நிகழ்வுகளும், அவர்களை பேசவிடாமல் கூச்சல் போட்ட அசம்பாவிதங்களும் அரங்கேறிய நிலையில், அன்றைய கூட்டத்தை மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் என்று எப்படி கூற முடியும். தேவையற்றவர்களை கருத்துக்கேட்பு கூட்டத்திற்குள் நுழைய அனுமதி வழங்கியது யார்?
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாடு, அதில் இருந்து மீள, சொத்து வரி, மின்கட்டணம் உள்பட அனைத்து வரிகளையும் உயர்த்தி மக்கள் வயிற்றில் அடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.