சன்னி லியோன் கதாநாயகியாக நடித்திருக்கும் ஷெரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் என 4 மொழிகளில் இத்திரைப்படம் தயாராகிறது .

இக்கிகை மோஷன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அன்சாரி நெக்ஸ்டல் மற்றும் ரவிக்கிரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் எழுதி இயக்குகிறார்.

முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைப்பில் ஒளிப்பதிவாளர் மனோஜ் குமார் கடோய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் ஷெரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது .