பிக் பாஸுக்கு போட்டியாக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஸீ தொலைக்காட்சி தயாராகிறது.

வெளிநாடுகளில் சர்வைவர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பிரபலம். ஆளில்லாத தனித்தீவில் போட்டியாளர்களை தங்க வைத்து, 100 நாட்களுக்குப் பிறகு தாக்குப் பிடிக்கும் போட்டியாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் தயாரிக்க ஸீ நெட்வொர்க் அனுமதி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மும்பையின் பிரபல தயாரிப்பு நிறுவனத்தினருடன் இணைந்து ஸீ இந்நிகழ்ச்சியை தயாரிக்கிறது.

தென்னாப்பிரிக்கா அருகே இதற்கென ஒரு தனித்தீவை அவர்கள் வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியையும் முக்கியமான அனைத்து மொழிகளிலும் உருவாக்குகின்றனர்.

சர்வைவர் நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியை அறிமுகம் செய்யும் விதமாக தற்போது வெளியாகியிருக்கும் புதிய ப்ரோமோ வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

https://youtu.be/BO-oXsDjFVI