சென்னை: கோடை விடுமுறையையொட்டி, பல்வேறு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ள தெற்கு ரயில்வே, தற்போது சென்னை முதல் நாகர்கோயில் வரையிலான சிறப்பு வந்தே பாரத் ரயிலை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

இந்த சிறப்பு ரயிலானது,   வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறையில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, கோடைக்கால சிறப்பு  ரயில்களை அறிவித்து வரும் ரயில்வே நிர்வாகம், இப்போது அதிவேக  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களையும் அறிவித்து உள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து நாகர்கோயிலுக்கு  கோடைகால சிறப்பு வந்தே பாரத் சேவை, இந்த மாதம்  இயக்கப்படும் என அறிவித்து உள்ளது. அதன்படி, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு, 5, 6, 7, 12, 13, 14, 19, 20, 21, 26, 27 மற்றும் ஏப்ரல் 28 ஆகிய தேதிகளில் கோடை சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்

ரயில் எண் 06057, சென்னை எழும்பூரில் இருந்து காலை 5:15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். மறு மார்க்கமாக, ரயில் எண் 06058 நாகர்கோவிலில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் இந்த வந்தே பாரத் கோடை சிறப்பு ரயில்கள் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். தற்போது ஏப்ரல் மாதத்தில் கூடுதல் சேவை வழங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப இந்த சேவை நீட்டிக்கப்படலாம் என இந்திய ரயிவே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கு இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில்,  ஏப்ரல் 2024 காலத்திற்கான கோடைகால சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணை மற்றும் நிறுத்தங்களுக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத் தைப் பார்க்கவும், டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்யவும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

பொதுவாகவே விடுமுறை மற்றும் பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் முழு முன்பதிவு அடிப்படையிலான சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டில், இந்திய இரயில்வே தீபாவளி மற்றும் நவராத்திரி கால கட்டத்திலும் 283 பண்டிகை சிறப்பு ரயில்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.