சென்னை: கோடை விடுமுறை மற்றும் தேர்தலை முன்னிட்டு, சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சென்று வரும் வகையில் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்து வருகிறது. இதற்கான முன்பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஐஅசிடிவி இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
கோடைக்கால விடுமுறையை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.45க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30க்கு திருநெல்வேலி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும்
எழும்பூரில் இருந்து விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக இந்த ரயில் நெல்லை சென்றடையும்
சென்னையில் இருந்து நெல்லைக்கு ஏப். 12, 19, 26 மற்றும் மே 10,17,24,31 ல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.10 க்கு நெல்லை சென்று சேரும்.
நெல்லையில் இருந்து சென்னைக்கு ஏப். 11, 18,25 மற்றும் மே மாதத்தில் 9, 16, 23, 30 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
நெல்லையில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
கோவில்பட்டி, சிவகங்கை, பட்டுக்கோட்டை, திருவாரூர், சீர்காழி வழியாக இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதுபோல சென்னை நாகர்கோயில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து 14, 21,28ஆம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) மாலை 5.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06019), மறுநாள் மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாளை (ஏப்ரல்8) மற்றும் வரும் 15, 22, 29ஆம் தேதிகளில் (திங்கள் கிழமைகளில்) மதியம் 3.10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
இந்த ரயிலானது சென்னையிலிருந்து புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மற்றும் வாஞ்சிமணியாச்சி, நெல்லை ஆகிய நிறுத்தங்களில் நின்று நாகர்கோவிலை சென்றடையும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.