சுஹாசினியின் 'சின்னஞ்சிறு கிளியே' குறும்பட போஸ்ட்டர் வெளியீடு…..!

Must read


கொரோனா வைரஸ் தொற்று மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர்.
சினிமா நட்சத்திரங்களும் பெரும்பாலும் சமூகவலைத்தளத்திலேயே பொழுதை கழிக்கின்றனர் .
ஊரடங்கால் வீட்டில் இருக்கும் சுஹாசினி மணிரத்னம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பிசியாக இருக்கிறார்.
சின்னஞ்சிறு கிளியே என பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் போஸ்ட்டரை சமூக வலைத்தளத்தில் சுஹாசினி வெளியிட்டுள்ளார். மலையாள நடிகை அஹானா கிருஷ்ணா இந்த குறும்படத்தில் நடித்துள்ளார். முழுவதும் வீட்டிலேயே ஐபோனில் எடுக்கப்பட்ட குறும்படம்.
ஜேம்ஸ் வசந்தன் இந்த குறும்படத்திற்கு இசையமைத்துள்ளார். கெவின் தாஸ் எடிட்டிங் செய்துள்ளார். சின்னச்சிறு கிளியே 20 நிமிட குறும்படம் இன்னும் சில தினங்களில் வெளிவரும் என கூறியுள்ளார் சுஹாசினி.

More articles

Latest article