திருச்சி: வெற்றியும் தோல்வியும் அரசியலில்  சகஜம் என்று கூறிய  பிரேமலதா விஜயகாந்த், 10 ஆண்டு ஆட்சியில் இல்லாத கட்சி தற்பொழுது ஆட்சியில் உள்ளது. ஆட்சியில் இருந்த கட்சி தற்போது ஆட்சி இல்லாமல் இருக்கிறது. எங்கள் இடத்தை நாங்கள் மீண்டும் பிடிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  பெட்ரோல் டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கிறது என்று கூறியவர், இது எந்த விதத்திலும் நியாயமில்லை என்று மத்திய அரசை சாடினார்.

கொரோனா காலகட்டத்தில் பலர் வேலையிழந்து உள்ள நிலையில் அனைத்து விலைவாசியும் உயர்ந்து உள்ளது. தற்போது கேஸ் விலை உயர்ந்துள்ளது, மக்களை அதிகமாக பாதிக்கும். எனவே மத்தியஅரசு, பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியிறுத்தினார்.

தமிழக அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,  வெற்றியும் தோல்வியும் சகஜம் 10 ஆண்டு ஆட்சியில் இல்லாத கட்சி தற்பொழுது ஆட்சியில் உள்ளது. ஆட்சியில் இருந்த கட்சி தற்போது ஆட்சி இல்லாமல் இருக்கிறது. அரசியலில் இதெல்லாம் சகஜம் எங்கள் இடத்தை நாங்கள் பிடிப்போம் பிடிப்போம் என்றார்.

தமிழக அரசு நிறுத்தி உள்ள தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகை திட்டம் ஆகியவற்றை மீண்டும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியவர்,  பெண்களுக்கான எந்த திட்டத்தையும் இந்த அரசு நிறுத்தி வைக்கக்கூடாது, தேவைப்பட்டால் அந்த திட்டங்களை ஆளும் கட்சிக்கு ஏற்ற மாதிரி  பெயரை மாற்றி திட்டத்தைத் தொடரலாம் என்றும் ஆலேசானை கூறினார்.