பெங்களூரு:

முன்பதிவு இல்லாத நகர ரெயில் டிக்கெட் பெற பிரத்யேக மொபைல் செயலியை கர்நாடகா வடமேற்கு ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி தற்போது விண்டோஸ், ஆந்த்ராய்டு ஸ்மார்ட் போன்களில் கிடைக்கும்.

இதன் மூலம் உள்ளூர் பயணத்துக்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெறுவது, ஃபிளாட்பாரம் டிக்கெட் பெறுவது, மாதாந்திர பாஸ் புதுப்பித்தல் போன்றவற்றுக்கு இருந்து வந்த சிரமம் இனி இருக்காது. பயணத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாக டிக்கெட் புக் செய்யலாம்.

மொபைலில் இருக்கும் டிக்கெட்டை பரிசோதகர்களிடம் சோதனையின் போது காண்பித்தால் போதுமானது. தனியாக பிரின்ட் அவுட் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த செயலி வழியாக புக் செய்யப்ப டும் ஃபிளாட் பார டிக்கெட்கள் 2 மணி நேரத்துக்கு செல்லுபடியாகும். அதேபோல் சிறிய கட்டண பிடித்தத்துடன் டிக்கெட்டை ரத்து செய்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.

இந்த டிக்கெட் தென்மேற்கு ரெயில்வே எல்லைக்குள் மட்டுமே செல்லத்தக்கது. இந்த எல்லைக்கு வெளியே பயணம் செய்வோர் டிக்கெட் நகலை ரெயில் நிலையங்களில் உள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இய ந்திரத்தில் இருந்து பிரின்ட் அவுட் எடுத்துக் கொண்டு பயணம் செய்யலாம்.

ஒரு டிக்கெட் கவுண்ட்டர் இருக்கும் ரெயில்நிலையங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கான கட்டணம் பே டிஎம் அல்லது ரெயில்வேயின் ஆர் வேலட் மூலம் மட்டுமே செலுத்த முடியும். மும்பையில் மட்டுமே நடைமுறையில் இருக்கும் இந்த திட்டம் தற்போது பெங்களுருவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான வழித்தடங்கள்….

# பெங்களூரு-கெங்கேரி.

# ஏலஹங்கா-ராஜன்குந்தி.

# ஏஸ்வந்பூர்-சிக்கபனவாரா-நேலமங்களா.

# பயப்பனஹல்லி-ஒயிட்பீல்டு.

# ஏலஹங்கா-தேவனஹல்லி.

# கேஎஸ்ஆர் பெங்களூரு-ஏஸ்வந்பூர்- ஏலஹங்கா-சென்னசந்திரா-பயப்பனஹல்லி-கேஎஸ்ஆர் பெங்களூரு.

# லோதேகோலஹல்லி-ஹீபல்ப-னஸ்வாதி-பயப்பனஹல்லி.