மேகாலயாவில் அர்ஜென்டினா, ஸ்வீடன், இந்தோனேசியாவுக்கு ஓட்டுரிமை….எப்படி கிடைத்தது?

Must read

உம்நியு (மேகாலயா):

மேகாலயா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் இத்தாலி, அர்ஜென்டினா, ஸ்வீடன், இந்தோனேசியா ஆகியோர் ஓட்டு போடவுள்ளனர்.

இந்த நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மேகாலயாவில் எப்படி வாக்குரிமை கிடைத்தது என்று தலையை போட்டு பிய்த்துக் கொள்ள வேண்டாம். இவை அனைத்தும் நாடுகளின் பெயர்கள் அல்ல. மலைப்ப ப குதிகள் நிறைந்த கிழக்கு காசி மாவட்டத்தில் ஷெல்லா தொகுதியில் உள்ள உம்நியு ம்றறும் தமார் இலகா கிராமங்களில் உள்ள வாக்காளர்கள் தான் இது.

காசி இன மக்கள் அந்த காலத்தில் ஆங்கிலம் மீது கொண்ட மோகம் காரணமாக அதன் அர்த்தம் புரிந்து கொள்ளாமலேயே இத்தகைய பெயர்களை சூட்டியுள்ளனர். இது மட்டுமல்ல இது போல் பல விநோத பெயர்களை கொண்ட நபர்கள் இங்கே வசிக்கின்றனர். அதை கேட்டால் அனைவருக்கும் சிரிப்பு வருவது நி ச்சயம்.

சகோதரிகளான பிராமிஸ்லாண்ட், ஹோலிலாண்ட் ஆகியோரின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் பெயர் ஜெருசலேம். என்ன தலை சுற்றுகிறதா..இப்படி தான் அங்கே பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய கிராமத்தில் இப்படி நூற்றுக்கணக்கானவர்களுக்கு இது போன்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.

இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் உள்ள இலகா கிராமத்தில் 850 ஆண் வாக்காளர்கள், 916 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 50 சதவீத்திற்கும் மேலானவர்களுக்கு இத்தகைய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.

திரிபுரா, கோவா என்ற பெயர்களும் சூட்டப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒரு பெண்ணுக்கு ‘‘ஐ ஹேவ் பீன் டெலிவர்டு’’ என்று பெயர் சூட்டியுள்ளார் அவரது தாய். நாடு, மாநில பெயர்கள் மட்டுமின்றி பொருட்கள் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. டேபிள், குளோப், பேப்பர், கோள்கள் பெயரான வீனஸ், சாட்டர்ன், அரேபியன் சீ, பசிபிச் சீ, கண்டங்கள் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

லவ்லிநெஸ், ஹேப்பினஸ் என்ற பெயர்களும் சூட்டப்பட்டுள்ளது. சுகி என்ற காசி மொழி வார்த்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சேர் (நாற்காலி) என்று வைக்கப்பட்டுள்ளது. இந்திய பெயர்களான பாரத், மும்தாஜ், துர்கா போன்ற பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்த க்கது.

More articles

Latest article