புதுடெல்லி:

எந்த சானலையும் தேர்வு செய்ய வாடிக்கையாளர்களை நிர்பந்திக்கக் கூடாது என, டிடிஹெச் நிறுவனங்களுக்கு இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(ட்ராய்) உத்தரவிட்டுள்ளது.


தூர்தர்ஷனின் 25 சானல்கள் இலவசமாக கிடைக்கும். அதுதவிர, வாடிக்கையாளர்கள் விரும்பிய சானல்களை மட்டும் தேர்வு செய்து பணம் செலுத்தி பார்க்கலாம் என ட்ராய் அறிவித்தது.

எனினும், இது குறித்த புகார்களும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ட்ராய்க்கு குவிந்து கொண்டிருக்கின்றன. தங்களது பேஸ் பேக்கை தேர்வு செய்ய முடியவில்லை என்றும், விரும்பிய சானலை தேர்வு செய்ய முடியவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

சில சமயங்களில் பேஸ் பேக்கை மாற்றியமைக்கவும் முடியவில்லை என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ட்ராய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல் 100 சானல்களில் விரும்பியதை தேர்வு செய்ய விடாமல் குறிப்பிட்ட பேக்கேஜை மட்டும் தேர்வு செய்ய டிடிஹெச் ஆப்பரேட்டர்கள் நிர்பந்திக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு, டிடிஹெச் ஆப்பரேட்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும்.

டிடிஹெச் ஆப்பரேட்டர்களின் இதுபோன்ற தவறுகளை கவனத்துக்கு கொண்டுவர, 0120-6898689 என்ற தொலைபேசி எண்ணிலும், das@trai.gon.in  என்ற இமெயில் ஐடியை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.