துபாயில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் அதிபர் உள்ளிட்ட பல தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இந்தப் புகைப்படம் குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் “ஒருவர் தனது கணவரை சமீபத்தில் விவாகரத்து செய்தவர் மற்றொருவர் தனது மனைவியை உதறித்தள்ளியவர்” என்று சர்ச்சைக்குறிய வகையில் பதிவிட்டுள்ளார்.