சனாதனம் குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையாக்கப்பட்டது.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 196 பிரிவின் கீழ் அமைச்சர் உதயநிதி மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.