சென்னை: சுப.வீரபாண்டியன் இயக்குனராக உள்ள  திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று மாலை  நடைபெறுகிறது.

சுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப.வீரபாண்டியன் சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர்.
இவரை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு  தமிழ்நாடு பாடத்திட்ட அறிவுரை குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியனை நியமித்து கவுரப்படுத்தி உள்ளது.
சுப.வீரபாண்டியன் நடத்தி வரும் திராவிடப்பள்ளியின் 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று மாலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில்  மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கு சுப.வீரபாண்டியன் தலைமையேற்கிறார்.  முதலாண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி.
தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்குகிறார். தொடர்ந்து, திராவிடர் கழக  பிரசாச்சார செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி வாழ்த்துரை வழங்குகிறார்.

சுபவீ என்று அழைக்கப்படும் சுப.வீரபாண்டியன் பிரபல சினிமா பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமனின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.