ஜேப்பியாருக்கு சொந்தமான சத்யபாமா குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ2010 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு…

Must read

சென்னை: ஜேப்பியாருக்கு சொந்தமான சத்யபாமா குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ2010 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவி ஏற்றதும், அரசு நிலங்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக  ஜேப்பியார் குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ₹2010 கோடி மதிப்பிலான 91 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

மறைந்த எம்.ஜி.ஆர் தலைமையிலான அமைச்சரவையில் இருந்தவர் மறைந்த ஜேப்பியார். இவர் சென்னை மற்றும் புறநகர்களில் கோடிக்கணக் கான ரூபாய் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வைத்துள்ளார். பல கல்வி நிறுவங்களையும் நடத்தி வருகிறார். இவரது நிறுவனம்மீது ஏராளமான புகார்கள் உள்ளது. ஜேப்பியாருக்கு சொந்தமான  கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் நன்கொடை மற்றும் கட்டணங்கள் ரொக்கமாகவே அதாவது கணக்கில் காட்டாத கருப்பு பணமாகவே வசூல் செய்துவதும், அவற்றை கணக்கில் காட்டாமல் இருப்பதும் வாடிக்கையானது.

இதனால், கடந்த 2019ம் ஆண்டு மத்தியஅரசின் வருமான வரித்துறை ஜேப்பியாருக்கு சொந்த 32 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. அதில்,  ரூ.1200 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் காட்டப்படாத பல நூறு கோடிகள் ரொக்கம், கணக்கில் காட்டப்படாத ரூ.350 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க – வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அறிவித்தது.

இந்த நிலையில், ஜேப்பியார் குழுமம் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களையும் வளைத்துபோட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்திய தமிழ்நாடு அரசு, ஜேப்பியாரின் சத்யபாமா பல்கலைக்கழகம் அமைந்துள்ள  செம்மஞ்சேரி பகுதியில், 91 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமதித்துள்ளதை கண்டறிந்து மீட்டுள்ளது.

இந்த பகுதியில் இன்று ஆய்வு செய்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இதன் மதிப்பு ரூ.2010 கோடி என தெரிவித்து உள்ளார்.

 

More articles

Latest article