சென்னை:
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் குறித்து அவதூறாக பேசியதாக, சுப.உதயகுமார் மீது நாகர்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில்உள்ளது. இதனால், நாடு முழுவதும் புலம்பெயா் தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள் உள்ளிட்ட ஏழை மக்களுக்கு தரமான உணவு மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாகா்கோவில் அருகேயுள்ள தனது வீட்டில் தனிமையில் உண்ணாவிரதமர் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பையும் நடத்தினார்.
இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஊரங்கை மீறி, செய்தியாளர்களை கூட்டத்தை கூட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் குறித்தும், கொரோனா குறித்து அவர் தவறான தகவல்களை அளிப்பதாகவும், தனது முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து அவர் மீது புகார் கூறப்பட்ட நிலையில், அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், பச்சை தமிழகம் கட்சியின் தலைவருமான சுப. உதயகுமாரன் மீது கோட்டார் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனா்.