சென்னை:

பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் போல் கபசுர குடிநீர் குடிப்பதும் பயனுள்ளதாக இருக்கும்; கொரோனா தாக்கம் ஏற்படுவதை தடுக்கும், உடலுக்கு  நன்மைதரும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்ர் ஜெயக்குமார், பொதுமக்கள் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினார்.

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் எவ்வாறு தடுப்பு மருந்தாக செயல்பட்டதோ, அது போல கொரோனா தடுப்புக்கு கபசுர குடிநீர் குடிப்பதும் பயனுள்ளது என்றார்.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்லும்போது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்  என்று அறிவுறுத்திய அமைச்சர்,  அரசின் அறிவுரைகளை கேட்டு நடந்தால் கொரோனா பாதிப்பில் 3ம் கட்டத்திற்கு செல்வதை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.