தன்னிடம் இருந்த 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று தெரிந்தவுடன் அதிர்ச்சியில் வங்கியின் வாசலில் மயங்கி விழுந்த ஏழைப்பெண் பரிதாபமாக மரணமடைந்தார்.

victim_notes

உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த சலவைத் தொழிலாளியான தீர்த்தராஜி (வயது 40) தனது தொழிலில் கிடைத்த வருமானத்தில் சிறுக சிறுக சேர்த்து 2000 அதை இரு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக மாற்றி வங்கியில் டெப்பாசிட் செய்ய எடுத்து வந்துள்ளார். வங்கிக்கு வந்தபோதுதான் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பு அவருக்கு தெரிந்திருக்கிறது. அதிர்ச்சியில் மயங்கி விழுந்தவர் அங்கேயே இறந்திருக்கிறார். வங்கியின் வாசலில் இறந்து கிடக்கும் அவரது உடலருகே இரு 1000 ரூபாய் நோட்டுக்கள் கிடக்கும் இந்த பரிதாபக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதுகுறிதது விசாரிக்கும்படி அந்த மாவட்டத்தின் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார்.
இன்னொரு சம்பவத்தில் உடல்நிலை சரியில்லாத தனது 8 வயது மகளை ஒரு தந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட முயன்றபோது பங்க் ஊழியர் 1000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்ததால் தாமதமாகியதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாகத் தெரிகிறது.