அனிதாவின் சொந்த மாவட்டமான அரியலூர் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்!

Must read

அரியலூர்,

ரியலூர் அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதாவின் தற்கொலை நாடு முழுவதும்  மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

1176 மதிப்பெண் பெற்ற மாணவி அனிதா, மத்திய அரசின் நீட் தேர்வு காரணமாக தனது கனவு படிப்பான மருத்துவம் படிக்க முடியாததால்,  தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை என மாநிலம்  முழுவதும் கல்லூரி மாணவ்ர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் அனிதா வின் சொந்த மாவட்டமான அரியலூரிலும் கல்லூரி மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியலூர் அ ரசு கலை கல்லூரி மாணவர்கள் 3000 பேர் அனிதா மரணம் நீதி கேட்டு மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் கல்லூரி வளாகத்தில் அனிதாவின் படம் வைத்து அதற்கு மெழுகுவர்த்தி கொளுத்தி அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

More articles

Latest article