நெட்டிசன்:

(வாட்ஸ்அப்)

தமிழ்நாட்டில் 192 மருத்துவ மேல்படிப்பிற்கான இடங்கள் (DM.cardio,MCH.gastro போன்று)உள்ளன.

இது மற்ற எல்லா மாநிலங்களின் உள்ள இடங்களின் கூட்டுத்தொகையை காட்டிலும் மிக அதிகம்.

இந்த superspeciality course படிப்பு இடங்கள் உருவாக்க நாம் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

இது தமிழ்நாடு மருத்துவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கடுமையான உழைப்பால் வந்தது

மேலும் ஒரு mch seat கொண்டுவர பல மருத்துவ பேராசியர்கள் தேவை

ஒரு மருத்துவ பேராசியரை உருவாக்க தமிழகஅரசு பல லட்சங்கள் செலவு செய்துள்ளது.

ஒரு பேராசியரை உருவாக்க குறைந்தது 6 ஆண்டுகள் பிடிக்கும்.

எனவே மற்ற மாநிலங்கள் இப்போது விரும்பினாலும் அவர்களால் MCH, DM போன்ற படிப்பிற்கு MCI Medical council of india ) அனுமதி பெற பல ஆண்டுகள் ஆகலாம்.

எனவே தான் மற்ற மாநிலங்கள் நீட் தேர்வை ஆதரிக்கின்றன. அதாவது நோகாமல் நொங்கு தின்ன ஆசைப்படுகின்றன

NEET தேர்வால் மற்ற மாநிலத்தவர் மிக சுலபமாக நமது மருத்துவக் கல்லூரியில் பயின்று படிப்பு முடித்தபின் அவர்கள் மாநிலத்திற்கு சென்றுவிடுவார்கள். இதனால் நமக்கு மட்டுமே பெருத்த நஷ்ட.ம்.

மேலும் தமிழ்நாட்டில் (IN SERVICE QUOTA ) அதாவது பட்ட மேற்படிப்பிலும், SUPERSPECIALTY படிப்பில் நமது தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்கு என்று 50 % தனி ஒதிக்கீடு உள்ளது.

இதன் மூலம் பயனடைந்த அரசு மருத்துவர்கள் அவர்கள் சாகும் வரை / அல்லது பணிஓய்வு காலம் முடியும் வரை அரசு பாணியில் இருக்க வேண்டும் என்பது சட்டம்.

அவர்களால் அரசு பணியை ராஜினாமா செய்ய முடியாது.

அவர்கள் கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவ மனையிலும் தேவையான, தகுதி வாய்ந்த அரசு மருத்துவர்கள் இருக்கின்றனர்.

இதுவே நமது பொது சுகாதாரத்துறை வலுவாக இருப்பதற்கான காரணம்

தற்போதுள்ள நீட் தேர்வால் அரசு மருத்துவரகளுக்கான இந்த 50 சதவிதம் இட ஒதுக்கீடு இல்லாமல் போய்விட்டது.

எனவே நீட் மூலமாக படிக்கும் மாணவர்கள் அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் இல்லை.

வெளி மாநிலத்தவர்கள் பலர் இங்கு படிக்கவே அதிகம் வாய்ப்புள்ளது.

“நீ அரிசி கொண்டுவா, நான் உமி கொண்டு வருகின்றேன் நாம் ஊதி ஊதி சாப்பிடலாம்” என்பது போல மற்ற மாநிலத்தவர் இங்கு வந்து படிக்க ஏற்பாடு செய்வதே NEET .

எனவே இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டு அரசு மருத்துவமனைகளில் தகுதி வாய்ந்த அரசு மருத்துவர்களின் பற்றாக்குறை ஏற்படும்.

ஏழைகளுக்கு அரசு மருத்துவ மனைகளின் வாயிலாக கிடைத்த சேவை இல்லாமல் போகும்.

தமிழ் மக்களுக்காக நாம் கொண்டுவந்த படிப்பு நமக்கு உதவாமல் போகும்.

எனவே நமது பொது சுகாதாரம் அழிந்து போகும்.

தமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சேவை என்பது இல்லாமல் போகும்.

மேலும் தகுதியுள்ள பேராசியர்களை நாம் உருவாக்க முடியாமல் போவதால் மேலும் பல மருத்துவ கல்லூரிகள் திறக்கமுடியாமல் போகும்.

தற்பொழுது உள்ள மருத்துவ கல்லூரிகள் செயல் படாமல் போகவும் வாய்ப்புள்ளது.

எனவே நீட் தமிழ்நாட்டிற்கு அழிவை மட்டுமே ஏற்படுத்தும்.

Courtesy:
மனவருத்தத்துடன்

DR. ராஜேஷ் ராஜேந்திரன்.MS.MCH UROLOGIST TIRUCHI