சென்னை : சென்னையில் கல்லூரி மாணவர்களின் அராஜகம் அதிகரித்து வருகிறது. நேற்று மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், இன்று அண்ணாசாலையில் மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக காவல்துறை செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாகி வருகிறது.
சென்னை அண்ணாசாலையில் இன்று காலை சென்றுகொண்டிருந்த மாநகர பேருந்தில், அண்ணாசாலையில் உள்ள கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பணம் செய்தனர். அவர்கள் பேருந்தின் படியிலும் சைடிலும் தொங்கியபடி, பேருந்தை தட்டியப்படி அராஜகம் செய்து வந்தனர். அவர்களை உள்ளே வரும்படி, கண்டக்கடர் கூறிய நிலையில், அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அராஜகம் செய்துவந்தனர். இதனால், பல பயணிகளும், மாணவர்களை எச்சரித்தனர்.
இதையடுத்து, அந்த மாணவர்கள், பேருந்தில் இருந்து கீழே இறங்கி, அருகே கிடந்த காலி மதுபாட்டிலை எடுத்து வீசி பேருந்தின் பின்புற கண்ணாடியை உடைத்தனர். இதனால் உடனே பேருந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ண்ணாடியை கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விரைந்து வந்த காவல்துறையினர், மாணவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.