சென்னை

கொரோனா தடுப்பு பணிக்கு உதவும் வகையில் சிறந்த செயலிகளை உருவாக்க அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனாத் தொற்று நோய்க்கு உலகின் பல நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. எனவே தற்போதைய சூழலில் நம்மை அத்தொற்றிலிருந்து காத்துக் கொள்வதே உடனடித் தேவையாக உள்ளது.

இந்நிலையில் கொரோனாத் தொற்றிற்கு எதிராக மக்களுக்கு பயன்படும் செயலிகள் மற்றும் இணையதளங்களை ஐஐடி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உருவாக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் “கொரோனா  எனும் பேரிடரிலிருந்து மக்களை பாதுகாக்க சிறந்த செயலி மற்றும் இணையதளங்களை உருவாக்க வேண்டும். சிறந்ததை உருவாக்கியோருக்கு தேசிய அளவில் விருதுகளும், வேலைவாய்ப்பும் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.