சென்னை: தமிழ்நாட்டில், அரசு கலை அறிவியல்  கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை 25% அதிகரித்து கொள்ளலாம் என சட்டசபையில் உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி கூறினார்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்-பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால், கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைகான அளவு அதிகரிக்கப்பட வேண்டும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  அரசு கல்லூரிகளில் நடப்பாண்டு  மாணவர் சேர்க்கைக்காக,  இருக்கின்ற இடத்திலேயே 25% இடத்தை அதிகரித்து கொள்ளலாம், அதற்கான உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது என்று  கூறினார்.