சென்னை:
லவச உணவு, சீருடை, தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உள்ள 22 அரசு சிறப்பு பிள்ளைகளில் 2021-2022ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்கை நடைபெறுகிறது. இலவச உணவு, சீருடை, தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன. இந்த வாய்ப்பை 5 முதல் 35 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.