சென்னை: மாணவி புகார் தெரிவித்த நிலையில், சென்னை சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கேகே பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து சென்னை சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலியல் புகார் கூறியுள்ளார். இதற்கு ஆசிரியர் தரப்பில் பதில் தெரிவித்ததாகவும், அதில், எனது பணியில் அர்ப்பணிப்பு குறித்து கடவுளுக்கு தெரியும், என் அன்பான மகளே!. உங்களுக்கு தெரியும். நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. நான் கொஞ்சம் ஸ்டிரிக்ட்டாகவே இருப்பேன். எனது மாணவர்களை நான் எப்போதும் பாதுகாப்பேன் என்று கூறியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் ஆனந்த், பள்ளி நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.