வார ராசிபலன்: 28.05.2021 முதல் 3.06.2021 வரை!  வேதா கோபாலன்

Must read

மேஷம்

உங்க மனக்குறையை வீட்டில் உள்ள பெரியோர்களிடம் சொல்ல அவர்களிடமிருந்து மனதிற்கு ஆறுதல் தரக் கூடிய ஆலோசனை கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர் களிடம் வீட்டு நிலையை கூற வேண்டாம். பண விஷயத்தில் கேர்ஃபுல்லா இருக்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வேலைப்பளு குறைய வாய்ப்புள்ளது. தொழில், பிசினஸில் கடுமையாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கும். வேலையில் தாமதங்கள் காணப்படும். அவற்றைக் கண்டு நீங்க நம்பிக்கை இழக்க வேண்டாம். உங்க நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும். முயற்சிகளைத் தொடருங்கள். எதிர்பார்த்த பலன்களை அதன் மூலம் பெறுவீங்க. உடல்நலத்தில் கேர்ஃபுல்லா இருக்க வேண்டும். உங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்குக் தியானம் செய்வது உதவிகரமாக இருக்கும். மனசை அமைதியா வெச்சுக்குங்க. டோன்ட் ஒர்ரி.

ரிஷபம்

அதிர்ஷ்ட பலன்களை எதிர்பார்க்கலாம். உங்க  வேலையை ஈஸியா முடிக்கக் கூடிய யுக்திகளைக் கண்டறிவீங்க. பண வரவு சிறப்பாக இருப்பினும், மறுபுறம் செலவும் இருக்கக்கூடும். குடும்பத்திலும், தொழிலிலும் உங்க புதுத் திட்டம் வெற்றி  தரக்கூடியதாக இருக்கும். உறவினர் வகையில் விரோதம் உண்டாக வாய்ப்புள்ளது. அதனால் சொல், செயலில் நிதானமும், கவனமும் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் உயரதிகாரிங்க ஆதரவு கிடைக்கும். படிப்பில் உங்க கடின முயற்சி காரணமாக நல்ல நிலை அடைவீங்க. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களோட அறிவுரை கேட்பது நல்லது. தேவையற்ற மன வருத்தங்கள் காணப்படும். இத்தகைய உணர்வை தவிர்த்தல் நல்லது. பிரார்த்தனை மற்றும் தியானங்கள் மூலம் ஆறுதல் பெறலாம். கேர்ஃபுல்லா இருங்க. வார ஆரம்பத்தில் பேச்சில் கவனமா இருங்கப்பா.

சந்திராஷ்டமம் : மே மாதம் 27 முதல் மே மாதம் 30 வரை

மிதுனம்

எந்த ஒரு தொழிலிலும், செயலிலும் தெளிவு இல்லாமல் காணப்படுவீங்க. உங்க உடல் நிலையிலும், மன நிலையிலும் அக்கறை தேவை. பலவிதமான குழப்பங்கள் ஏற்படும். எந்த முடிவெடுப்பதற்கு முன்னும், நன்கு சிந்தித்து செயல் படுவது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மற்றவர்களிடம் மனகசப்பு ஏற்படலாம். தொழிலில் சில முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். புதிய தொழில் நுட்பங்களால் நல்ல அனுபவத்தைப் பெறுவீங்க. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். அடிக்கடி ஏற்படும் பயணங்கள் தடைப்படும். வீடு மாற்றம் அல்லது தூரமான அல்லது விரும்பாத இடத்திற்கு மாற்றங்கள் இப்போதைக்கு இருக்காது. எனினும் தேவையே இல்லாமல் மனசைப் போட்டு டென்ஷன் பண்ணிக்குவீங்க. அது வேணாமே? மற்றவங்க கிட்ட பேசும்போது வார்த்தைங்களை கொஞ்சம் கேர்ஃபுல்லா யூஸ் பண்ணுங்கப்பா. அது போதும். பிகாஸ்.. பேச்சில்தான் ஒங்களை மாட்டிவிடுவாங்க.

சந்திராஷ்டமம் : மே மாதம் 30 முதல் ஜூன் 1 வரை

கடகம்

எல்லா விஷயங்கள்லயும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிங்க திட்டங்களை முறியடிப்பீங்க. இந்த வாரம் எல்லாம் கலப்பு பலன்களாகவே இருக்கும். உங்க விருப்பங்கள், அபிலாஷைகள் அனைத்தும்  நிறைவேறத் தாமதம் ஆகும். பொருளாதார நிலை மற்றும் குடும்ப நிலை ஓரளவே சிறப்பாக அமையும். சிலருக்குப் பணி நிமித்தமாக செல்ல வேண்டிய வெளியூர் பயணங்கள் போக்குவரத்துத் தடைகளால், தாமதப்படும். பிராயணங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேறம் காண இயலாது. இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம். உறவுகளைப் பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படும். இலாபம் அதிகம் பெற புதிய விற்பனை யுக்திகளைக் கடைபிடிப்பீங்க. வாரக்கடைசியில் செய்யும் செயல்களிலும் பேசும் பேச்சிலும்… ஏன்.. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கேர்ஃபுல்லா இருந்துட்டால் போதுங்க. உங்களை யாரும் அசைக்க முடியாது.

சந்திராஷ்டமம் : ஜூன் 1 முதல் ஜூன் 3 வரை

சிம்மம்

நிறைய கிரங்கள் உங்களுக்கு அனுகூல அமர்வில் உள்ளனர். உத்யோகத்தில் சிந்தித்துச் செயல்பட வேண்டிய வாரம். எதிரிகள் பலர் உங்களை பின்னிழுத்து அவர்கள் முன் செல்ல நினைப்பாங்க. உடல் நலனில் கவனமாக இருங்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். வெளியில் உணவு வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உணவில் கவனம் வேண்டும். தொழில். வியாபாரம் சூடு பிடிக்கும். சிறிய விஷயங்களுக்குக் கூட எளிதில் உணர்ச்சிவசப்படுவீங்க. மனதில் சமநிலையோடு இருங்கள். நெருங்கிய நண்பர்களால் ஆறுதல் கிடைக்கும். இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் அரசுத் தொல்லை களால், தள்ளிப்போகும். புதிய நடவடிக்கைகளை ஓத்திப்போடுவது நல்லது. வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் தாமதமாகவே கிடைக்கும். குழந்தைங்க ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.

கன்னி

இந்த வாரம் உங்க உடன் பிறப்புகள் மூலமாக இருந்த  தொல்லைகள் தீரும்.  பயணங்கள் தாமதப்படும். அதன் காரணமாக நன்மைகள் ஏற்படும். உங்க செயல்திறன் கூடும். பலவழிகளிலும் வெற்றி மேல் வெற்றி வரும். பணப் பிரச்சனைகள் எழும். பிற்கால நலன் கருதி சேமிப்புக்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு உயர்  அதிகாரிங்க ஆதரவால் பணியில் முன்னேற்றங்கள் ஏற்படும். வேலைப் பளுவும் கூடும். சிலருக்குப் வாகன யோகம் உண்டு. கூட்டாளிங்க நியாயமற்ற நடவடிக்கைகள் உங்க மனதில்  குழப்பத்தைத் தரும். முன்பின் அறியாதவர்களுடன் பேச்சு வைத்துக் கொள்ள வேண்டாம். குழந்தைங்க தேர்ச்சி பெருமிதம் தரும். விவசாயிகளுக்கு அரசின் உதவிகள் எளிதில் கிடைக்கும். கொஞ்சநாளா மனசுக்குள்ள இருந்துக்கிட்டிருந்த பயமும் வேதனையும் காணாமல் போயிருக்குமே? கங்கிராட்ஸ்.

துலாம்

எதிர்பார்த்தவங்க அனுகூல பலனைத் தருவாங்க. இருந்தாலும் இதை எல்லாம் சமாளிப்பீங்க. குழந்தைகளினால் செலவுகள் அதிகரிக்கும். உடல் நலனில் சிறப்பு கவனம் தேவைப்படலாம். எதிரிகளால் தொல்லை ஏற்படும். நீங்க பலவீனத்தால் பாதிக்கப்படலாம். தற்போது செலவெல்லாம் அதிகரிக்கக்கூடும், எனவே கட்டுப்பாடு அவசியம். உங்களுக்குக் கீழே பணிபுரியறவங்க தவறான அபிப்ராயங்கள், உங்க முயற்சியால் விலகும். புதிய தொடர்புகள் ஏற்படும். குறுகிய பயணங்கள் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் மன வருத்தங்கள் மறைந்து நிம்மதியும் குதூகலமும் ஏற்படும். வாரத்தின் பிற்பகுதியில் உங்க பொருளாதார தேவைகள் எல்லாமே சிறப்பா நிறைவேறும். ஃப்ரெண்ட்ஸ் கூடப் பொழுது போக்குகளுக்குப் பணம் செலவழிப்பீங்க. ரிலேடிவ்ஸ்ஸின் தேவைக்கேற்ப அவர்களுக்கு நிதியுதவியும் அளிப்பீங்க!

விருச்சிகம்

வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். லேடீஸ்  அறிவுத்திறன் கூடும். அவர்களுக்குக் ஹஸ்பெண்ட் ஒத்துழைப்பு கிடைக்கும். பணவிஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.  நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் தடை, தாமதங்கள் ஏற்பட்டாலும், தேர்ச்சி உண்டு.  உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. வரவேண்டிய புதிய தகவல்கள் தாமதமாகவே வரும். சிலருக்கு, பணமுடை நீங்கும்  வீட்டு வாடகை வசூல் பாக்கிகள் வரும்  வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கும் முயற்சியில் வெற்றிகாண்பீங்க. சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னைங்க வராம கேர்ஃபுல்லா பாதுகாத்துக்குங்க. ஜாலியா இருங்கப்பா. டோன்ட் ஒர்ரி. கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். ஸ்வீட்டாப் பேசுவீங்க.

தனுசு

வேலையை ஈஸியா முடிக்கக் கூடிய சாமர்த்தியம் இருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும்தாங்க. ஆனாலும்கூட இன்னொரு பக்கம் செலவும் இருக்கக்கூடும். மனசை ரெடியா வெச்சுக்குங்க. மற்றபடி தாங்க முடியாத செலவெல்லாம் இல்லைங்க. குடும்பத்திலும், தொழிலிலும் உங்ளோட புது திட்டம் வெற்றியைத் தரக்கூடியதா இருக்கும். நண்பர்கள், உறவினர் வகையில் விரோதம் உண்டாக வாய்ப்புள்ளது. அதனால் சொல், செயலில் நிதானமும், கவனமும் தேவை. குடும்பத்தில் எல்லாரும் ஹாப்பியா இருப்பீங்க. வேலையில் உயரதிகாரிங்க ஆதரவு கிடைக்கும். கடந்த சில  வாரமாய்த் தடைப்பட்ட சில வேலைகள் முடியும். பண வரவில் சிறு தடை இருக்கும். இருப்பினும் வந்து சேரும். உங்க மதிப்பும் மரியாதையும் உயரும். சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பாங்க. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.

மகரம்

தனவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். நண்பர்கள் மற்றும் ரிலேடிவ்ஸ் வருகை மகிழ்ச்சி தரும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் குறையும். போட்டியாளர்களைக் காட்டிலும்  சாதனைகளை அதிகரிப்பீங்க. பயணங்களை ரத்து செய்ய வேண்டாம். . சிலரின் உடல் நலிவு சரியாகும். பெண்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். சிலருக்கு வீண் அலைச்சல்களும், செலவுகளும் இருக்கும். பக்தியில் அதிக நாட்டம் ஏற்படும். மனம்  அமைதியுறும். நல்லவர் யார்  கெட்டவர் யார் என்பது புரியும். பொழுது போக்கு அம்சங்களில் கவனம் செலுத்துவதால் மகிழ்ச்சியுடன் இருப்பீங்க. ஒங்களோட பேச்சினால் நல்ல விஷயங்கள் நடக்குங்க. மற்றவங்களை அனுசரிச்சுப் போகப்போக நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.  தேவையே இல்லாம கவலைப்படறதை நிறுத்திடலாங்க. அதுக்கு பதில்  தெய்வ நம்பிக்கையும் பிரார்த்தனையும் அதிகமா ஹெல்ப் செய்யும்ல.

கும்பம்

வாழ்க்கையும், உங்க பொருளாதாரம் உயரும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை உயரக் கூடும். எதிர்பாராத இடங்களிலிருந்து தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். மன சங்கடம் உருவாகலாம். தியானம் செய்வதும், பேச்சை குறைப்பது நன்மை தரும். உங்க பணிகள் உங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய கடின உழைப்பிற்கான திருப்தியான மனநிலையையும் பெற்றுத் தரும். பணி இடத்தில் உங்க செயல்களால் உங்களுக்கு எதிரிகளை தேடிக்கொள்வீங்க. வியாபாரத்தைப் பொறுத்தவரையில் உங்களுக்கு சுமாரான காலம் எனலாம். எல்லா விஷயங்களும் சாதாரணமாகவே இருக்கும். குழந்தைங்களுக்கு வாழ்க்கைல நன்மையெல்லாம் நடக்கும். ஹஸ்பெண்ட்/ ஒய்ஃப் பொருளாதாரத்தில் திடீர் முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு ஷ்யூரா இது லக்கியான வாரமா இருக்கும். டோன்ட் ஒர்ரி.  பிரார்த்தனைகள் உதவும்.

மீனம்

தேவையற்ற பகை உணர்வைக் கைவிடுவது நல்லதுங்க.  தாயின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தரும். மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குச் செல்வாக்குக்  குவியும். சில பணிகளை நீங்களே முன் நின்று பொறுப்பு எடுத்து நடத்தினால் தான் பணியில் முன்னேற்றம் காணலாம். சில நடவடிக்கைகளை நீங்க தள்ளிப்போட வேண்டியிருக்கும். தொழிலில் ஒப்பந்தங்கள் மூலம் சிறந்த பலன் கிடைக்கும். பொறுமை தேவை. உங்க நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் எதற்கும் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். உங்க முயற்சிகள்   நல்லமுறையில் தொடரும். எதிர்பார்த்த பலன்களை அதன் மூலம் பெறுவீங்க. வாகனம் வாங்கற ஐடியா இருந்தால் அந்த விருப்பம் நல்ல முறையில் நிறைவேறும். மாணவமாணவிகளுக்கு இது ஹாப்பி வீக். திடீர் நண்பர்கள் ஹெல்ப் செய்வாங்க. ஆரோக்யம் சூப்பரா இருக்கும். டோன்ட் ஒர்ரி.

 

 

More articles

Latest article