Skip to content
  • Sat. Sep 12th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

மாணவர் சேர்க்கை குளறுபடி: ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய கவர்னர் கிரண்பேடி தடை…

Nov 10, 2020

புதுச்சேரி:  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கையில் , வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் போலி சான்றிதழ் மூலம், மருத்துவ படிப்பில் இடம்பிடித்துள்ள விவகாரம் சர்ச்சையான நிலையில், ஜிப்மர் மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என்று கவர்னர் கிரண்பேடி  ஜிப்மர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு உள்ளார்.

ஜிப்மரில் எம்பிபிஎஸ் படிப்பில் புதுச்சேரியில் 150 இடங்கள், காரைக்காலில் 50 இடங்கள் என மொத்தம் 200 இடங்கள் உள்ளன. இந்தஆண்டு முதல் ஜிப்மரிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மத்திய மருத்துவக் கலந்தாலோசனைக் குழு மாணவர் சேர்க்கையை நடத்தியது. புதுச்சேரி மாநில சட்டத்தின்படி, புதுச்சேரியை பூர்விகமாக கொண்ட மாணவர்களுக்கு 64 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், நடப்பாண்டில்,  அந்த இடங்களில் வேறு பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரியில் வசித்து வருவதாகப் போலியான சான்றிதழைக் கொடுத்து, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் புதுச்சேரி  மாணவர்களுக்கான இடத்தை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக முதல்வர  நாராயணசாமி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில்,  இந்த முறைகேடு தொடர்பாக, அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவரான அன்பழகன் எம்.எல்.ஏ. கவர்னர் கிரண்பேடியை சந்தித்து புகார் அளித்துள்ளார்.  இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையடுத்து, கவர்னர் கிரண்பேடி  ஜிப்மர் நிர்வாகத்துக்கு சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,  போலி என கூறப்படும் ஆவணங்களின் சரிபார்ப்பு நிலுவையில் உள்ளதால் அத்தகையவர்களின் சேர்க்கையை இறுதி செய்யவேண்டாம் என்று ஜிப்மர் இயக்குனரை கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Post navigation

கேரள பாதிரியாருக்கு சொந்தமான 66 கிறிஸ்தவ நிறுவனங்களில் வருமானவரி சோதனை! போலி அறக்கட்டளை மற்றும் ரூ.14 கோடி சிக்கியது
பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மதியம் 12 மணி நிலவரம்: நிதிஷ் கூட்டணி 128, தேஜஸ்வி கூட்டணி 101…

Related Post

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விதிகளில் தளர்வு: கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் பெறலாம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer