மாணவர் சேர்க்கை விவகாரம்: ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய கட்டுப்பாடு

Must read

சென்னை:

மிழகத்தில் செயல்பட்டு வரும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 30 சதவிகிதத்திற்கும் குறைவா மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றால், அந்த நிறுவனங்களை மூட வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் விதி முறைகளின்படி, 30% குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள கல்வி நிறுவனங்களை மூடலாம் என்றும்,  இந்த புதிய நடை முறை அடுத்த கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்து உள்ளது. எனவே, 2019-20ம் கல்வியாண்டு முதல் தேசிய 30% மாணவர்கள் சேர்ந்திருந்தால் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 247 தனியார் மற்றும் 29 அரசு நிதிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல் பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில், ஆசிரியர் பயிற்சிக்கு மாணவ மாணவிகள் சேர்வது குறைவாகவே உள்ளது. நவீன காலத்திற்கு ஏற்ப பெரும்பாலோர் பொறியியல் மற்றும் ஆர்ட்ஸ் காலேஜ்களில் சேர்ந்துவிடுவதால் மாணவர்கள் சேர்க்கையின்றி பல கல்லூரிகள் திண்டாடி வருகின்றன.

இதன் காரணமாக அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகி யுள்ளது.

More articles

Latest article