மாநில தலைமை தகவல் ஆணையர் பதவி: 3 பேர் கொண்ட தேர்வு குழு அமைப்பு

Must read

சென்னை:

மிழகத்தின்,  தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்க 3 பேர் குழுவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தற்போதைய தமிழக தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பிரியா இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய  மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்க மூவர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வெங்கடேசன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு செயல்படும் தேடுதல் குழு புதிய தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் என்று  தமிழக அரசு  அறிவித்து உள்ளது.

More articles

Latest article