சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து விவாதிக்க வலியுறுத்தி  பேரவையில், திட்டமிட்டு நாடகம் அரங்கேற்றியது அதிமுக என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு உள்ளார். மேலும் விஷ சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

இன்று சபை கூடியதும் அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குறித்துவிவாதிக்க வலியுறுத்தினர். அதை சபாநாயகர் ஏற்காத நிலையில், அவர் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை சபாநாயகர் அதிரடியாக வெளியேற்றினார்.  மேலும் இன்று அவை நடவடிக்கைகள் கலந்துகொள்ள அவர்களுக்கு தடை விதித்தது. இதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்தார். எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், அதிமுகதான் அவையில் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேறியது என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சுமத்தி உள்ளார். .பேரவை விதிகள் தெரிந்தும் திட்டமிட்டு நாடகத்தை அதிமுக அரங்கேற்றி உள்து என்றும் பேரவையில் பேச வாய்ப்பு அளித்தும் அமளியில் ஈடுபடுவதை அவர்கள் தவிர்த்திருக்க வேண்டும்  என்றவர்,   ஜனநாயக முறையில் பேரவை நடைபெற வேண்டும் என அக்கறை கொண்டவன்,  அதனால்,  அதிமுக உறுப்பினர்களை மீண்டும் இன்றே அவைக்குள் அனுமதிக்க வேண்டும் என சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்களை ஒருநாள் முழுவது சஸ்பெண்ட் செய்த உத்தரவை, முதலமைச்சர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று ரத்து செய்வதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

ஆனால் சபாநாயகரின் அழைப்பை அதிமுக எம்எல்ஏக்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த,  கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீது சட்டப்பேரவையில் விவாதம் தொடங்கியது.  இதன்மீது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், டிசம்பர் 2001 ல் கடலூர் மாவட்டம் பண்ரூட்டியில் கள்ளச்சாரய மரணங்கள் நிகழ்ந்தன. 52 நபர்கள் அப்போது இறந்தனர். அப்போது உரிய நடவடிக்கை சரியாக எடுக்கவில்லை என்று பேசிவிடுவோமோ என்று அஞ்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், இன்று உரிய நடவடிக்கையை திமுக அரசு எடுத்துள்ளது என்றவர், விஷ சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறினார்.