மதுரை: கொரோனா பரிசோதனைகளுக்காக கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் தனியார் ஆய்வகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளபப்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். கூடுதல் கட்டணங்கள் வசூலித்தால் 1800 425 3993 அல்லது 104 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
தமிழகத்தில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா 2வது அலைத்தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது குறித்து, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்யவிருக்கிறார். இந்த ஆலோசனை மே 24-ம் தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், இந்த முக்கிய ஆலோசனை நடைபெறவிருக்கிறது.
இதற்கிடையில், தமிழகஅரசு கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டது. தனியார் ஆய்வங்களில் கொரோனா பரிசோதனை கட்டணங்களையும் அறிவித்தது. ஆனால், பல ஆய்வங்களில் கூடுதலாக பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மா.சுப்பிரமணியன், கொரோனா பரிசோதனைகளுக்காக கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் தனியார் ஆய்வகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளபப்டும் என்று எச்சரித்தவர், கூடுதல் கட்டணங்கள் வசூலித்தால் 1800 425 3993 அல்லது 104 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனறும் தெரிவித்துள்ளார்.