சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கொரோனா நோயாளிகளை உடனுக்குடன் மருத்துவமனையில் அனுமதிக்கும் வகையில் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு டாக்சி ஆம்புலன்ஸ் சேவையை அமல்படுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சேவைக்கு, மத்திய சுகாதாரத்துறை பாராட்டு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரமாகி வருகிறது.  நாட்டிலேயே அதிக பாதிப்பு உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தினசரி 35ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  பாதிப்புக்கு உள்ளாபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதிலும், சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் பல்வேறு பள்ளி, கல்லூரிகள்  செய்யப்பட்டுள்ள நிலையில், நோயாளிகளை உடனே அழைத்துச் செல்லும் வகையில்  டாக்சி ஆம்புலன்ஸ் சேவைகளையும் மு.க.ஸ்டாலின் அரசு ஏற்படுத்தி உள்ளது.  சாதாரண ஆம்புலன்ஸ்க்கு மாற்றாக டாக்சிகளை ஆம்புலன்ஸ் ஆக மாற்றி  பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த டாக்சி ஆம்புலன்ஸ் சேவை குறித்து,  பிரதமர் மோடி, மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துரையாடிய போது, எடுத்துரைக்கப்பட்டது. இதை சுகாதாரத்துறையின் கவனத்திற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு டாக்ஸி ஆம்புலன்ஸ் குறித்து பட்டியலிட்ட இருப்பதுடன்,  தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ள  டாக்சி ஆம்புலன்ஸ் சேவைக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல 108 ஆம்புலன்ஸ்களின் தேவை அதிகரித்துள்ள சூழலில், 250 கால் டாக்சிகளை, ஆம்புலன்ஸ்களாக மாற்றியுள்ளது சென்னை மாநகராட்சி. இந்த சேவையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த 15ந்தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 50 கார் ஆம்புலன்ஸ்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.