சென்னை,
வார்தா புயலில் ஏற்பட்டுள்ள சேதத்தை பார்வையிட வந்த மத்திய குழுவினரை சந்திக்க திமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
வார்தா புயலில் தமிழகத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு நிவாரணம் கோரியும் முதல்வர் ஓபிஎஸ், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அதைத்தொடர்ந்து, மத்திய குழுவினர் சேதங்களை பார்வையிட இன்று தலைமை செயலகம் வந்தது.
அவர்களை தலைமை செயலகத்தில் சந்திக்க திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முயற்சி செய்தனர். ஆனால், தலைமை செயலகம் வந்த மத்தியக் குழுவை சந்திக்க திமுக எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தலைமை செலயக பாதுகாவலர்கள் திமுக எம்எல்ஏக்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக திமுக எம்.எல்.ஏக்கள், காவலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மத்திய குழுவை சந்திக்க செய்தியாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.