உரிய பேருந்து நிறுத்ததில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும்! போக்குவரத்துத்துறை உத்தரவு…

Must read

சென்னை: அரசு பேருந்து ஓட்டுநர்கள், உரிய பேருந்து நிறுத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும், பேருந்து நிறுத்தத்தை தாண்டி பேருந்தை நிறுத்தக் கூடாது  உள தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பல பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை ஓட்டுநர்கள் நிறுத்தாமல் சென்று விடுகின்றனர். மேலும் பல இடங்களில் பேருந்து நிறுத்தத்தை தாண்டி நிறுத்துகின்றனர். இதனால், பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள், மாணாக்கள் கடும் அவதியடைந்தனர்.

இநத் நிலையில்,  தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து ஓட்டுநர்கள் ,இனி உரிய பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக,பேருந்து நிறுத்தத்தை தாண்டியோ,சாலையின் நடுவிலோ பேருந்தை நிறுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும்,பேருந்து நிறுத்தத்தை விட்டு பேருந்தை தள்ளி நிறுத்துவதால், பயணிகள் சிரமப்படுகிறார்கள் எனவும்,பேருந்து நிறுத்தத்தை தாண்டி நிறுத்தும்போது பயணிகள் ஓடிச்சென்று பேருந்தில் ஏற முயலும்போது பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும்,சில நேரங்களில் மரண தொடர்பான விபத்தும் ஏற்பட ஏதுவாகிறது எனவும் கூறி அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் மட்டும் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article