வெங்கடேசன்
வெங்கடேசன்

writer-files-compaint-against-thapandian
தனது புத்தகத்தின் தலைப்பையும், கருத்தையும் திருடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா. பாண்டியன் புத்தகமாக வெளியிட்டுள்ளதாக  கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த எழுத்தாளர் வெங்கடாசலம் என்பவர் கோவை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த 2013ம் ஆண்டு திருவள்ளுவரின் அரசியல் பொருளாதார கொள்கை என்ற நூலை எழுதி வெளியிட்டேன்.  அந்த நூலை,, அரசு நூலகத்தில் வைக்க ஒப்புதலும்  பெற்றேன்.
இந்த நிலையில் இந்த புத்தகத்தின் தலைப்பையும், கருத்தையும் சிறிது மாற்றம் செய்து திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம் என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாண்டியன் புத்தகமாக வெளியிட்டுள்ளார். ஆகவே தா.பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
“ கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ள புகாரின் அடிப்படையில்  நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட இருக்கிறேன்” என்றும் எழுத்தாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.