ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கிய இத்தாலி டென்னிஸ் வீராங்கனை சாரா எர்ரானி 2 மாதங்கள் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்படுவதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தாயின் புற்றுநோய்க்கான மாத்திரைகளை தான் தெரியாமல் சாப்பிட்டுவிட்டதாக அவர் கூறி உள்ளார்.
இத்தாலியை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சாரா எர்ரானி. இவரிடம் மேற்கொண்ட ஊக்க மருந்து பரிசோதனை யில் அவர் ஊக்க மருந்து எடுத்திருந்தது நிரூபணமானது.
ஆனால், சாராவோ, அது தனது தாயின் மார்பக புற்றுநோய் சிகிச்சைகக்காக எடுக்கப்பட்ட மருந்து என்றும், அதை தான் தவறுதலாக எடுத்துவிட்டேன் என்றும் கூறினார். இருந்தாலும், தடை செய்யப்பட்ட லெட்ரோசோல் என்ற மருந்தை எர்ரானி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறியதாகும். சாரா எர்ரானி அதை மீறியிருப்பதாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்த அவருக்கு 2 மாதம் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள அவர், தனது தாயின் புற்றுநோய் மாத்திரைகளை தான் தவறுதலாக பயன்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.