சென்னை:

டிகர் சிவகுமார் குடும்பத்தினர் நடத்தி வரும் அகரம் பவுண்டேசன் விழாவில் பேசிய நடிகர் சூர்யா, பல இடங்களில் மாணவ மாணவிகளை ஆசிரியர்களே சாதிப் பெயரைக்கொண்டு திட்டும் கொடுமை நடைபெற்று வருவதாக கண்கலங்கியபடி கூறினார்.

அகரம் பவுண்டேஷன் 10வது ஆண்டுவிழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், அவரது மகன் சூர்யா, காத்தி உள்பட ஏற்கனவே அகரம் அறக்கட்டளை உதவியுடம் பயின்ற  ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் சூர்யா, நான் நல்லா நடிப்பேன், இன்னும் நிறைய சம்பாதிப்பேன். அதை வைத்து இன்னும் நிறையா செய்வேன். இந்த அறக்கட்டளையின் சக பயணியா என்னோட பங்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும் என்று கூறியவர்,  நடிப்பின் மூலம் கூடுதலாக சம்பாதித்து அகரம் அறக்கட்டளை யின் வாயிலாக இன்னும் பலருக்கு  உதவுவேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், குடும்பம், சமூகம் மற்றும் செய்யும் தொழில் ஆகிய மூன்றுக்கும் மாணவர்கள் சரிசமமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியவர், நமது சொந்த வாழ்க்கையை மட்டுமின்றி, இந்த சமூகத்தை பற்றியும் சிந்திப்பதுதான் வாழ்க்கை என்றவர், இன்றளவும் சில பள்ளிகளில் ஆசிரியர்களே  குழந்தைகளின் சாதிப் பெயரை சொல்லி திட்டும் கொடுமைகளும், சரியான முறையில் பாடங்களை சொல்லிக்கொடுக்காத அவலங்களும்  அரங்கேறி வருகிறது என்று கண்கலங்க பேசினார்…

சூர்யாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.