சென்னை:
சிலை கடத்தல் தொடர்பான வழக்கின் இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், உயர்நீதி மன்றம் விதித்துள்ள 21 வழிமுறைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு மார்ச் 23 வரை இறுதி கெடு விதிப்பதாகவும் கூறியுள்ளது.
தமிழக கோவில்களில் திருடு போயுள்ள சாமி சிலைகள் தொடர்பான வழக்கில், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்க வேல் விசாரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து ஜ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சிலைக் கடத்தல் சிறப்பு பிரிவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டது. மேலும், சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளையும் உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் வழங்கி இருந்தார்.
இந்த வழக்கில் கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, 50 ஆண்டுகள் பழமையான சிலைகளை இருட்டு அறையில் வைப்பதற்கு இந்து சமய அறநிலையத் துறை ஏதற்கு என்று கேள்வி எழுப்பிய நிதிபதி, தான் நேரில் சென்று பார்த்த 1,700 கோவில்களிலும் இதே நிலை தான் தொடர்ந்து வருகிறது என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக பிறப்பித்த 21 வழிமுறைகளில் ஒன்றுகூட இந்த 8 மாதத்தில் அமல்படுத்தப்படவில்லை என உய்ரநீதிமன்ற நீதிபதி மகாதேவன் வேதனை தெரிவித்தார்.
அரசு நிகழ்ச்சியின் மேடை அலங்காரங்களுக்கு ரூ.1.75 கோடி செலவு செய்யும் அரசு, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராததற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்.
மேலும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்ற நீதிபதி அரசு நிகழ்ச்சியின் மேடை அலங்காரங்களுக்கு ரூ.1.75 கோடி செலவு செய்யும் அரசு, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராததற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.
மேலும், சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக பிறப்பித்த 21 வழிமுறைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு விதிப்பதாகவும் கூறினார்.