உத்தம வில்லன்’ பட வெளியீட்டின் போது பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியது லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ். அப்போது லிங்குசாமிக்கு உதவ முன்வந்தார் கமல்.ரூ.10 கோடியை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திடம் வாங்கியுள்ளார் கமல்.

ஞானவேல்ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்குப் படம் பண்ணித் தருவது அல்லது அடுத்த பட வெளியீட்டின் போது கொடுத்துவிடுவது என ரூ.10 கோடியை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திடம் வாங்கியுள்ளார் கமல்.

4 ஆண்டுகள் கடந்தும் இந்தப் பணத்துக்கு கமல் எந்தவொரு பதிலுமே கூறாததால் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இதற்குக் கமல் தரப்பில் இருந்து ஏற்கனவே ஒரு விளக்கம் அளிக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது மீண்டும் ஒரு அறிக்கை விடுத்து எச்சரித்துள்ளது ராஜ்கமல் நிறுவனம்.

நீங்கள் கமல்ஹாசனுக்குக் கொடுத்ததாகக் கூறும் ரூ.10 கோடி தொடர்பான விவரங்களையும் அதேபோல் கமல்ஹாசன் உங்களுக்குப் படம் செய்து கொடுக்கிறேன் என்று நீங்கள் கூறுவதற்கான ஆதார விவரங்களையும் உடனடியாக அளிக்குமாறு வலியுறுத்துகிறோம். அல்லது இது தொடர்பாக நீங்கள் புகார் அளித்ததாக வந்த செய்திகளின் அடிப்படையில் நீங்கள் புகாரை வாபஸ் பெறவும், நீங்கள் விளக்கமளிக்கவும் கோருகிறோம்.

இவற்றை நீங்கள் செய்யத் தவறும்பட்சத்தில் உங்கள் மீது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சிவில் மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.