சமீபத்தில் பார்த்திபன் ட்விட்டரில் ”வணக்கம்! அடுத்தது பற்றி நிறைய ஓடுகிறது மனதில்,அதில் ஒரு ஸ்கிரிப்டுக்கு Fitness freak -ஆன 25 வயது பெண் (சிரித்தால்… சில பசங்களையாவது சீரியஸாக்கி I c u- க்கு அனுப்பக்கூடிய) நடித்து அனுபவமுள்ளவர் தேவை.” என்று பதிவிட்டிருந்தார் .

அதற்கு நடிகர் சதீஷ் பெண் போல வேடமிட்டு அதை புகைப்படமெடுத்து பார்த்திபனுக்கு ட்விட்டரில் அனுப்பி “இது ஓகேவா சார்?” என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த பார்த்திபன் “இவ்வளவு அழகை வைச்சி என்ன செய்றது ? சதீ(டீ)ஷ்கர் பொண்ணு மாதிரி இருக்கு! தலைகானில பஞ்சு இருந்தா தூங்கலாம்,தங்கம் இருந்தா ?” என்று புகழ்ந்துள்ளார். தற்போது இந்த ட்விட்டர் பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.