டெல்லி: கவர்னரின் ஒப்புதலின்றி பல்கலைக்கழகங்களுக்கு  துணைவேந்தர் நியமனம் செய்தது செல்லாது என கொல்கத்தா உயர்நீதி மன்ற உத்தரவை, உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இது மேற்குவங்க முதல்வர் உள்பட பல மாநிலங்களில் கவர்னர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் மாநில அரசுகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்பட்டுள்ளது.

மாநில கவர்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளுக்கு எதிராக செய்லபடுவதாக புகார்கள் கூறப்படுகிறது. இதையடுத்து, கவர்னரை மீறி செயல்படும் வகையில் பல்வேறு சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது, மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் மாநில கவர்னரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், மாநில அரசு விரும்பிய அதிகாரிகளை துணைவேந்தர்களாக நியமிக்க முடியாத சூழல் உள்ளது. இதை தடுக்கும் வகையில், கவர்னரின் அதிகாரத்தை முடக்கும் வகையில், தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சோனாலி சக்ரவர்த்தி பானர்ஜி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி மம்தா அரசால் மீண்டும் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதி மன்றத்தால், பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், கவர்னரின் அனுமதியின்றி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சோனாலி சக்ரவர்த்தி பானர்ஜியை நியமனத்தை ரத்து செய்து கடந்த செப்டம்பர் 13 ந்தேதி உத்தரவிட்டார்.

கொல்கத்தா ஐகோர்ட்டின் தீர்ப்பை  எதிர்த்து மம்மா அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும், மேற்கு வங்க கவர்னரின் ஒப்புதலின்றி மாநில அரசு பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் முடிவை எடுக்க முடியாது என்று தெரிவித்து உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மம்தாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மம்தா மட்டுமின்றி, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.