மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்

Must read

சென்னை:
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான அறிவிப்பை ஏற்கனவே தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், டி.கே ரங்கராஜன் ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஏப். 2ம் தேதியுடன் முடிகிறது.

மார்ச் 26 ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கு வரும் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். பின்னர் 16ம் தேதி வேட்புமனு மறுபரிசீலனை செய்யப்படும்.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஆர்.கிரிராஜன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார் மற்றும் சு.கல்யாணசுந்தரம் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் இன்று வேட்புமனு அளிக்க உள்ளனர்.

More articles

Latest article