சென்னை: கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை  மாநில அரசு அறிவித்து உள்ளது. ஆனால், மதுபான கடையான டாஸ்மாக் கடைகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும்  விதிக்கப்படாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளை இன்று மதியம்  தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி,

திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்.10-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

 ஏப்ரல் 10ஆம் தேதியில் இருந்து கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பு

50 % இருக்கைகளுடன் திரையரங்கம் இயங்க தமிழக அரசு அனுமதி

திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி

 இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி 

சென்னை கோயம்பேடு சந்தையில், சில்லறை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

, மிகப்பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதிக்கலாம்.

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வர இ-பதிவு அவசியம்.

தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து கடைகள், மிகப்பெரிய (நகை, ஜவுளி) கடைகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

அதோடு, காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தவும், வீட்டிற்கு வீடு சென்று காய்ச்சல் சளி இருமல் உள்ளவர்கள் தினந்தோறும் கண்காணிக்கவும் நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடுள்ளது.

, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வராத வகையில் காவல்துறை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றும்,

நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

வணிக நிறுவனங்களுக்கு எராளமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள தமிழகஅரசு, குடிமகன்கள் கூடி கும்மாளமடிக்கும் டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் பார்களுக்கு மட்டும் எந்தவித கட்டுப்பாடும் அறிவிக்கவில்லை.   இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஒருவேளை குடிமகன்களுக்கு கொரோனா பரவாது போலும்..

,