தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: ஸ்டாலின் நம்பிக்கை

Must read

சென்னை:

மிழகத்தில் வரும் 18ந்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு  பிறகுஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய திமுக தலைவர்  ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி தொகுதியில் ஓட்டு வேட்டையாடி வருகிறார். பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து தொண்டாமுத்தூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, திமுக வெற்றிபெற்றுவிடும் என்பதாலேயே அதிமுக உள்ளாட்சித் தேர்தலை நடத்த மறுத்துவருகிறது என்று குற்றம் சாட்டியவர், கோவை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணியையும் கடுமையாக விமர்சித்தார்.

திமுக ஆட்சியின்போது, பெண்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தியதாக தெரிவித்த ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வழக்கை ஆட்சியாளர்களுக்கு சாதகமாகவே திசை திருப்பவே  சிபிசிஐடி விசாரித்துக் கொண்டிடிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.  தானும் ஒரு பெண்ணைப் பெற்றவன் என்று கூறிய ஸ்டாலின், பொள்ளாச்சி விவகாரம் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என்றவர், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

More articles

Latest article