சென்னை:

வேலூர் மக்களவை தொகுதியில், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் திமுக வேட்பாளராக களத்தில் உள்ள நிலையில், அவருக்கு ஆதரவு திட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் நாளை முதல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு போட்டியிடும் திமுக வேர்பாளர்   கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்  பிரசார சுற்றுப்பயணம் செய்ய உள்ள அதன் விவரத்தை திமுக தலைமை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து 2 கட்டங்களாக பிரசாரம் செய்கிறார்.

முதல்கட்டமாக, நாளை (27ந்தேதி) தொடங்கி 28, 29 ஆகிய மூன்று நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

இரண்டாம் கட்டமாக, ஆகஸ்ட் மாதம் 1,2,3 ஆகிய மூன்று நாட்களிலும் அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.