சென்னை: தமிழகத்தில்  கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து,  27 தொண்டு நிறுவனங்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா 2வது அலை தமிழகத்தில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகஅரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்து தொடர்பாக தொண்டு நிறுவனங்களுடன்  முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டம்  நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும்  என்றும், இதில் பங்கேற்க , 27 தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த  கூட்டத்தில், தமிழக  முக்கிய அமைச்சர்கள், துறை செயலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.